மொராக்கோ அருகே படகு கவிழ்ந்து 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு சஹாரா, மொராக்கோ நாடுகள் வழியாக ஐரோப்பாவின் ஸ்பெயினுக்குள் பலர் சட்டவிரோதமாக நுழைவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக இந்த நாடுகளில் பல்வேறு சட்டவிரோத தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய நிறுவனங்கள் மூலம் பலர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் குடியேறுகின்றனர்.

ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உட்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துவிட்டதாக ஸ்பெயினை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவான ‘வாக்கிங் பார்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.

கடந்த 2-ம் திகதி இவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கியதாகவும் வாக்கிங் பார்டர்ஸ் கூறியுள்ளது.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 6 பேர் கொண்ட விசாரணைக் குழு மொராக்கோவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles