மோடி சிறந்த தலைவர்: ட்ரம்ப் புகழாரம்!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது டொனால்டு டிரம்ப் பேசியதாவது: –

இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள். பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார்.

இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம்\” என்றார்.

Related Articles

Latest Articles