மோடி – மஹிந்த 26 இல் முக்கியத்துமிக்க கலந்துரையாடல்!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று (காணொளி ஊடான உச்சி மாநாடு) எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

காணொளி ஊடாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது எனவும், டில்லியின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்தடன், இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் உரையாடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதம அமைச்சராக பதவியேற்றபின்னர் கடந்த பெப்ரவரி மாதம் டில்லிக்கு சென்று, பாரத பிரதமரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதன் ஓர் தொடர்ச்சியாகவே இந்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles