யார் இந்த காமினி செனரத்?

இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் , ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (19) முற்பகல், காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை நிர்வாகச் சேவையில் விசேட தர அதிகாரியான காமினி செனரத் , ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மேலதிகச் செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும், 2004 – 2005, 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் பிரதமரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஹக்மன மெதடிஸ் கல்லூரி, மாத்தறை ராஹுல மற்றும் காலி ரிஷ்மன்ட் கல்லூரிகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயின்றுள்ள செனரத் , களனி பல்கலைக்கழகத்தில் முதல் பட்டத்தைப் பெற்று, இலங்கை நிர்வாகச் சேவையில் இணைந்துகொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினித் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ள அவர், ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், பாகிஸ்தான், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பயிற்சிப் பாடநெறிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ள செனரத் அவர்கள், மக்கள் வங்கி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குத் தலைமைத்துவம் வகித்துள்ளார்.

இந்நிலையில், பிரித் பாராயணத்துக்கு மத்தியில் காமினி செனரத் அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles