யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளைப் பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் பண்ணை, நாவாந்துறை, காக்கைதீவு மற்றும் சின்னக்கடை மீன்சந்தைகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, முத்திரை பதிக்கப்படாத தராசுகளை பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










