யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் கைதான இருவரில் ஒருவர் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் ஒருவரது மகன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியாச்சரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் 20g ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யபட்டுள்ளனர்.
சுமார் 25 மற்றும் 23 வயதை சேந்த குறித்த நபர்கள் கைதான சமயம் குற்றத்தடுப்பு பொலிசாதுக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் குறித்த இருவருள் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடமிருந்து அபாயகரம் மிக்க வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் யாழ் மாவட்ட போலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்றையதினம் கைதான இருவருடன் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைதாகி இருப்பதாக பொலிசார் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது