யாழில் சிறுமிமீது வன்கொடுமை! 59 வயது முதியவர் கைது!!

யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்த நேரம் பக்கத்து வீட்டு நபர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாயார் இந்த விடயம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் வாயைப் பொத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற குறித்த நபர், சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles