யாழில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றிநடைபோட்ட மலையக சிறுமி

நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி பயிலும் எச். கே. அருணீமா, யாழ்ப்பாணம் சர்வதேச சதுரங்க திறந்த சுற்றுப்போட்டியில் பங்கேற்று, 11 வயது விருதுப்பிரிவில் 6.5 புள்ளிகளுடன் (6 வெற்றி, ஒரு சமநிலை) இரண்டாம் இடத்தை சுவீகரித்துக்கொண்டார்.

சதுரங்க விளையாட்டரங்கில் சிறுவயதிலிருந்தே (5) திறமையை வெளிப்படுத்திவரும் குறித்த மாணவி, The Future Chess Academy யில் ஆசிரியர் நிரோஷன் செனவிரத்ன மற்றும் நவீன் காவிந்த ஆகியோரிடம் சதுரங்க பிரத்தியேக பயிற்சியும் பெற்றுவருகின்றார்.

டிசம்பர் 8ஆம் திகதிமுதல் 12 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் – யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க திறந்த சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு, 11 வயது விருதுப்பிரிவில் 6.5 புள்ளிகளுடன் (6 வெற்றி, ஒரு சமநிலை) இரண்டாம் இடத்தை சுவீகரித்துக்கொண்டார்.

இது அவரின் சதுரங்க விளையாட்டுப்யணத்தில் ஓர் முக்கிய மைல்கல்லாக நோக்கப்படுகிறது. இதற்குமுன்னர் அவர் மலையக மண்ணில் பாடசாலைகளுக்கிடையிலான மற்றும் தேசிய மட்டப்போட்டிகளில் பலமுறை சம்பியன் பட்டம் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

2021 இல் (கொரோனா காலகட்டத்தில் இணையவழி மூலம் இடம்பெற்ற) மேற்கு ஆசிய சதுரங்கப்போட்டியில் 26ஆவது இடத்தையும், 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆசிய நாடுகளுக்கிடையிலான சதுரங்கப்போட்டியிலும் 11 ஆவது இடத்தையும், மேலும் இந்த ஆண்டு இலங்கையின் தெற்குப்பகுதியில் இடம்பெற்ற DHAMSO சர்வதேச திறந்த சதுரங்கப்போட்டியில் 11 வயது விருதுப்பிரிவில் 5.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஜோர்ஜியாவில் ஜூன் மாதம் இடம்பெற்ற குறுநேர சதுரங்கப்போட்டிகளான Rapid மற்றும் Blitz உலக அரங்குப்போட்டியிலும் (The World Cadets & Youth & Blitz Chess Championship 2023) தெரிவானார் என்பதுடன் நுவரெலியா மண்ணிலிருந்து சர்வதேச மட்ட (ஆசிய மற்றும் உலகத்தர) சதுரங்கப்போட்டிகளுக்கு மிகக்குறைந்த வயதில் தெரிவான முதலாவது மலையக மாணவி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் இவர் இன்னும் உயரிய தளங்களில் சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துவதுடன், இவரைத் தொடர்ந்து இன்னும் பல மலையக மாணிக்கங்கள் தேசிய மற்றும் சர்வதேச சதுரங்க விளையாட்டரங்கில் பிரகாசிக்க வேண்டும் என்பது எமது பேரவாவாகும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles