யாழில் மூதாட்டி கொலை! மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி Dr.வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார். அதன் அறிக்கையில் மூதாட்ட கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டியை பராமரித்துவந்த இருவர் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles