யாழில் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய இனம்தெரியாத குழு!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத குழு ஒன்று தீயிட்டு கொளுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட் மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வருகைதந்த இனம்தெரியாத நபர்களால் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles