யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஐவர் கைது!

 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் நேற்றிரவு 5 பேர் கொண்ட குழு ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டு காயத்துக்கு உள்ளான இளைஞர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles