யாழில் விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ். சாவகச்சேரி A9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(12) அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வீதியில் நடந்துச் சென்ற குடும்பஸ்தர் மீது மோதியிதில் அவர் உயிரிழந்தள்ளார்.

உயிரிழந்தவர் குருணாகலை சேர்ந்தவர் 34 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்த தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles