யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் 2 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த இருவரும், குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles