யாழ்., தமிழகம் கப்பல் சேவை மே 13 மீள ஆரம்பம்

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200 ரூபாவை அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

செரியா பாணி என்ற பெயரை கொண்ட கப்பல் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் சீரற்ற வானிலையால் அந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles