யாழ். மாகநரசபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி

யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அது மாத்திரமின்றி தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைலைத்து கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை காவல்துறையினர் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று இடம்பெற்ற தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles