யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன் களத்தில் – தமிழரசு கட்சி முடிவு

யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனை களமிறக்குவதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.

எனவே, வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் என தெரியவருகின்றது.

‘உதயன்’, ‘சுடர் ஒளி’ ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரான ந. வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்தி போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றனர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளைவேனில் கடத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்னர் சிறைதண்டனையும் அனுபவித்தார்.

ஸ்தம்பித நிலையில் இருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்பு கிளைக்கு புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர்.

Related Articles

Latest Articles