யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 906 பேர் கைது!

யுக்திய சுற்றிவளைப்பில் நள்ளிரவு 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 862 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர்.

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினரினால் பட்டியலிடப்பட்டிருந்த 21 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குற்றப்பிரிவினரால் பட்டியலிடப்பட்டிருந்த 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா, போதைவில்லைகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles