யுக்திய நடவடிக்கைக்கு அஞ்சி சிவிலினுக்குள் ஒளிந்தவர், அது உடைந்ததில் கீழே விழுந்து பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 300 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எட்டியாந்தோட்டை நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் பொலிஸார் நேற்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பிரகாரமே யட்டியாந்தோட்டை பொலிஸாரால் குறித்த வீட்டில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸாருக்கு அஞ்சி அந்த வீட்டில் இருந்த நபர் சிவிலினுக்குள் ஒளிந்துள்ளார். சிவிலின் உடைந்ததையடுத்து அவர் கீழே விழுந்துள்ளார். அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடமிருந்து 5 கிராம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், 12 வங்கிக் கணக்கு புத்தகங்களும், 59 காசோலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. காசோலைகளின் பெறுமதி 300 லட்சம் ரூபாவுக்கும் அதிகம். அவற்றை அவர் திரட்டிய விதம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.










