யூரோ கிண்ணம் யாருக்கு? இத்தாலி – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11 ஆம் திகதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டியுள்ள இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி 1966-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு எந்த உயரிய கோப்பையையும் முகர்ந்ததில்லை. நடப்பு தொடரில் கட்டுக்கோப்புடன் ஆடிய இங்கிலாந்து, எதிரணிக்கு ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.

கேப்டன் ஹாரிகேன் (4 கோல்), ரஹீம் ஸ்டெர்லிங் (3 கோல்), மேக்குவையர், ஜோர்டான் ஹென்டர்சன் ஆகியோர் நம்பிக்கை தூண்களாக உள்ளனர். உள்நாட்டில் 60 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் களம் இறங்குவதால் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள்.

இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 கோல் அடித்தால் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் கிறிஸ்டியானா ரொனால்டோவை (5 கோல்) பின்னுக்கு தள்ளிவிட்டு தங்க ஷூவை வெல்ல முடியும். ஒரு கோல் அடித்து 2 கோலுக்கு உதவிகரமாக இருந்தாலும் அவருக்கு தங்க ஷூ கிடைக்கும்.

4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டுத் தள்ளியுள்ளது.

கடைசி 33 சர்வதேச போட்டிகளில் அந்த அணி தோற்றதே இல்லை. கேப்டன் ஜியார்ஜியோ செலினி, பெடரிகோ சீஸா, இம்மொபைல், லோரென்சோ இன்சினே, லியோனர்டோ போனுக்சி, கோல் கீப்பர் டோனருமா உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. நெருக்கடியை திறம்பட சமாளிப்பதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 11-ல் இத்தாலியும், 8-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. 8 ஆட்டம் டிராவில் முடிந்தது. மகுடம் சூடும் அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். போட்டி கட்டணம், லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியை பரிசாக அள்ள முடியும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles