ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எனவே, அவர் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு முழுமையாக சுதந்திரம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
” ரஞ்சன் ராமநாயக்கவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே ரஞ்சனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.










