ரணிலா, தம்மிக்க பெரேராவா? திங்கள் இறுதி முடிவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டு கட்சியின் செயலாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா என்பது குறித்து மொட்டு கட்சி பரிசீலித்துவருகின்றது. இந்நிலையிலேயே திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles