ரணிலால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் – தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும்! விஜயகலா

” ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும்.” என்று ஐக்கிய தேசிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.

யாழ். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்டிருந்தார். அந்த காலத்தில் வடக்கு மக்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அதன் காரணமாக தற்போதைய ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்களால் தோல்வியடைந்தார்.

வருகின்ற ஜனாதிபதி தேர்தலிலும் அவர் போட்டியிடவுள்ளார். போட்டியிட்டு உண்மையிலேயே அமோக வாக்குகளை பெற்று நாட்டை முன்னோக்கிகொண்டு போவதற்கு உங்களுடைய போதிய ஒத்துழைப்பினை வேண்டி தான் இந்த கட்சி மறுசீரமைப்புதற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது
அந்த ஒரு நோக்கத்தோடும் அதற்கும் அப்பால் இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு நமது கட்சித் தலைவரிடம் உள்ளது.

எனவே வடக்கில் உள்ள மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் தலைவருக்கு அமோக வாக்களித்து அவரை வெற்றியடைய வைப்பதன் மூலமே எமது நாட்டினை முன்னேற்றிக் கொள்ள முடியும்.

எங்களுடைய தலைவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தால் வடக்கு பகுதியில் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை கட்டாயமாக நிறைவேற்றுவார்.” – என்றார்.

Related Articles

Latest Articles