ரணிலின் பயணப்பாதையை மாற்ற முற்பட்டால் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்நாட்டை மீட்க முடியும். அவரின் பயணப்பாதையை மாற்ற முற்பட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னதாக அரசமைப்பில் உள்ள ஏற்பாட்டுக்கமைய ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அதேபோல நிராகரிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலின்போது மக்கள் அதனை செய்யலாம். 225 எம்.பிக்களை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்துவரும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். உலகில் நாடொன்று வங்குரோத்தடைந்தால் மீண்டுவர 8 முதல் 10 ஆண்டுகள்வரை செல்லும். எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து அடைந்த எமது நாட்டை சீரான நிலைக்கு ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார். மே நடுப்பகுதியளவில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக மீண்ட பின்னர் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்.

தற்போது எமக்கு வேறு வழியில்லை. ஒரே வழிதான் உள்ளது. அந்த வழியை மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles