ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது.
” ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை. எமது வசம் தகுதியான பிரதமர் இருக்கிறார்.” என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை, பஸில் ராஜபக்சதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சியாகும். தற்போதுகூட மக்களை திரட்டும் சக்தி எம்மிடம் உள்ளது. பஸில் ராஜபக்ச சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். அது நடக்காது. 2015 இல் ராஜபக்சக்களை வீழ்த்த பார்த்தனர். அதுவும் முடியாமல் போனது. நிச்சயம் நாம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவோம்.
விமல், கம்மன்பில போன்றவர்களே அரசின் பயணத்தை குழப்பினர்.” – என்றும் குறிப்பிட்டார்.
தேசிய அரசு அமைக்கப்படும் என வெளியாகும் தகவலையும் நிராகரித்தார்.