ரணில் தீர்வை தருவார் – சம்பந்தன் நம்பிக்கை

” தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளகூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே, அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

” புதிய அரசு மேற்கொள்ளும் சகல நடவடிக்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்பது இதன் மூலம் அர்த்தமாகாது. எனினும், மக்களின் நலனுக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கும்.” எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் அவருக்கு வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை குறித்து நன்கு தெரியும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காண்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக இலகுவானது எனவும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பலமாக அரசாங்கத்தை கட்டியெழுப்பிய பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles