ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, துப்பாக்கி பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.










