” ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன், அரச பயங்கரவாதத்தை கையில் எடுக்காமல், மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் இடித்துரைத்தார்.