ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலிலேயே மோதுண்டுள்ளனர்.
இவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இது விபத்தா என்ற கோணத்திலும் விசாரணைகள் தொடர்கின்றன.
நிருபர் டி. சந்ரு