கண்டியிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலில் சிக்குண்ட நபரின் காலின் கீழ் பகுதி முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
எல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் – ரயில் பாதையில் வைத்தே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன், அவர் எல்ல வீதி வெள்ளவாய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஆவார். மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
