ரஷ்ய விமான விவகாரம் – நீதி அமைச்சருக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்பு!

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ர

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தைவிரைந்து தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.

Aeroflot விமான சேவை நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட Celestial Aviation Trading நிறுவனத்திற்கு இடையே வணிகப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய விமானம் ஒன்றுக்கு சொந்தமான MSN 1301 என்ற விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட விடாது கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Celestial Aviation Trading நிறுவனம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜதந்திர ரீதியான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles