ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது.
எண்ணை இறக்குமதிக்கு தடை மற்றும் போர் குற்றம் சார்ந்ததாக தனிநபர்கள் மீதான தடைகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
இதன்படி, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுவது ஆறு மாதங்களுக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், யுக்ரேனின் மாரியபோல் மற்றும் ஏனைய நகரங்களில் மேற்கொள்ளப்படும் போர்குற்றங்கள் தொடர்பில் ரஸ்ய இராணுவத்திற்கு எதிராக புதிய தடைகள் ஏற்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முற்றாக நிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எரிவாயு இறக்குமதியை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆறு மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கபடுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
