ராஜபக்ச அணியிலிருந்த சுதர்ஷினி சஜித் பக்கம் தாவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

இவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதியான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பாரியாராவார்.

பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த அரசாங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles