ராஜபக்சக்கள்தான் ஆள வேண்டும் – மொட்டு கட்சி எம்.பி.

ராஜபக்சக்கள் பக்கம் நிற்பது பாவம் அல்ல. எனவே, ராஜபக்சக்கள் இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆள்வதையே நான் விரும்புகின்றேன் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

“ மூன்றாவது முறையாகவும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக வருவதை நீங்கள் விரும்புகின்றீர்களா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோஹித அபேகுணவரதன,

“ மூன்றாவது பரம்பரையாக அல்ல ராஜபக்சக்கள் தொடர்ச்சியாக பதவியில் இருப்பதை விரும்புகின்றேன். எனக்கு கட்சி தாவும் பழக்கம் கிடையாது. ஒரே அணியில்தான் இருக்கின்றேன். மஹிந்த ராஜபக்ச ராஜபக்ச என்ற தலைவர் இந்நாட்டுக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். எனவே, ராஜபக்சக்கள் பக்கம் நிற்பது பாவம் அல்ல. “ – என்றார்.

அதேவேளை, தேர்தல் ஆட்டத்துக்கு நாம் தயார். மட்டை தயாராகவே உள்ளது எந்த பந்து வந்தாலும் அடித்தாட தயார். அது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் தயார், பொதுத்தேர்தலாக இருந்தாலும் தயார்.” – என்றார்.

Related Articles

Latest Articles