ஹிஷாலினி விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஊமையாகிவிட்டது. தமது கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள, தமது கட்சியின்கீழ் போட்டியிட்ட ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஏன் இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை – என்று அமைச்சர் விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகப்பூர்வமற்ற பொருளாளரா
சட்டவாக்க சபையில் உறுப்பினராக உள்ளவர் எவ்வாறு சிறுமியை வேலைக்கு அனுமதிக்க முடியும்? இருட்டறையில் வைக்கப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 11 யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சிறார்கள் என தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குதான் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரின் வீட்டில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர்களுள் ஒருவர் அவர். எனவே, ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஏன் இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேட்கின்றோம். ” – என்றார்.