ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ரிஷாட் பதியுதீனை வெளியேற்றுவதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்துவிட்டு, நீதிக்காக குரல் கொடுப்பதே பொருத்தமான செயற்பாடாக அமையும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை,ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.