ரிஷாத் பதியுதீனுக்கு இடைக்காலத் தடையுத்தரவு!

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மனுவை பெப்ரவரி 28ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles