யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏனைய நாடுகளில் பல்வேறு இனங்களை, மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் சென்றனர். இதற்கு ருவாண்டா சிறந்த உதாரணமாகும்.
இன்று ருவாண்டாவில், பழங்குடிப் போருக்குப் பதிலாக பழங்குடி நல்லிணக்கம் காணப்பட்டு வருகிறது. இன, மத பேதங்களை ஒறுபுறம் வைத்துவிட்டு, நாடு அபிவிருத்தியடைந்து இன்று ஆப்பிரிக்காவின் சிங்கப்பூராக மாறி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக பல அழுத்தங்களையும் சேதங்களையும் வடக்கு கிழக்கு சந்தித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த மாகாணத்திற்கு அபிவிருத்தியின் பலன்கள் கிடைக்கவில்லை. இது ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது எனவும்எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகளை வழங்க முடியாதுபோயுள்ளது. போஷாக்கின்மை அதிகரித்துள்ளது. எனவே இன, மத, சாதி, குல, கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
