ரூ. 1700 இற்கு தம்மிக்க பெரேராவே தடையாக இருக்கிறார்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு ஜனாதிபதியாக ஆசைப்படும் தம்மிக்க பெரேராவே தடையாக இருந்துவருகின்றார் – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 19 பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றன.
ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரே எதிர்க்கின்றார். அவர்தான் தம்மிக்க பெரேரா. 2 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் ஒருதடவைக்கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில்லை.

ஒரு நிறுவனத்தை ஒழுக்காக நடத்தாதவர் எப்படி நாட்டை நிர்வகிப்பார்?
தம்மிக்க பெரேராவின் 2 பெருந்தோட்ட நிறுவனங்களும் பல மில்லியன் இலாபம் பெற்றுள்ளன.

இன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்தான் கொழும்பு வந்தனர். சம்பளம் இல்லையேல் ஒரு லட்சம் தொழிலாளர்கள் கொழும்புக்கு வருவார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles