ரூ. 1700 – உயர்நீதிமன்றத்தை நாடிய பெருந்தோட்ட நிறுவனங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழில் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறும், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

எனினும், குறித்த வர்த்தமானி அமுல்படுத்தப்படுவதைத் தடுத்து, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்காதிருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனை சவாலுக்குட்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.

பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தன மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போ​து, எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles