மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவது தொடர்பிலேயே இச்சந்திப்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், மேற்படி சந்திப்பு விரைவில் நடக்கும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
‘பெருந்தோட்ட கம்பனிகள் கால அவகாம் கோரி இருந்தன. ஒரு மாத காலப்பகுதிக்குள் அவர்களின் அறிக்கையை முன்வைக்குமாறு நாம் வலியுறுத்தி இருந்தோம்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்துதான் தீர்வை முன்வைக்க வேண்டும். அந்தவகையிலேயே கால அவகாசம் கோரியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்.” -எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.










