அரசாங்கமும், பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து கூட்டு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சம்பள விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டால் சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படும் என அன்றே நாம் சுட்டிக்காட்டி இருந்தோம் எனவும் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசு பொய்களைக்கூறி போலி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றது எனவும் திகாம்பரம் விசனம் வெளியிட்டார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் என திகாம்பரம் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.