“ அரச பெருந்தோட்ட நிறுவனங்கள்கூட இன்னும் சம்பள உயர்வை வழங்கவில்லை. எனவே, சம்பள உயர்வு விடயத்தில் அரசு நாடகமாடக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
“நாகரீகமற்ற சில வார்த்தை பிரயோகங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பயன்படுத்தியுள்ளார். இது ஏற்புடைய அறிவிப்பு அல்ல. நாம் கடந்த இரு வருடங்களாக நாகரீகமாக அரசியல் நடத்தினோம். இப்படியான அறிவிப்புகளை விடுக்கும்போது அதற்கு பதிலளிக்க வேண்டிய நிலை எமக்கும் ஏற்படுகின்றது.” – எனவும் திகாம்பரம் கூறினார்.










