ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம்.

கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து, இந்த வசூல் நிலையை அடைந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூலைவிட, 11-வது நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸுடன் நடித்திருந்தனர். முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

‘யூத்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸை நாயகனாக நடிக்கவைக்க தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆனால், ‘யூத்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு ஊர்களுக்கு படக்குழுவினருடன் பயணப்பட்டு வந்தார் கென் கருணாஸ்.

இப்படத்தினை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தி, சிம்பு உல்ளிட்ட பலர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles