பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்படும் நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்களாக தலைமறைவாகியிருந்த நிலையிலேயே, பிலிமத்தலாவ பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஒரு பட்டதாரி என்பதுடன் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். அத்துடன், தென்மாகாணத்தில் உள்ள விகாரையொன்றில் உயர் பதவியையும் வகித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது பிரமிட் வியாபாரத்தில் எவரேனும் முதலீடு செய்திருந்தால் முறையிடலாம் எனவும், இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
