” அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருக்காமல் அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்க உடன் வெளியேற வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நானும் அமைச்சரவையில் இருந்துள்ளேன். எனவே, எதாவது செய்வதாக இருந்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிவிட்டு செயற்பட்டிருக்க வேண்டும். மரக்கறி சந்தையில் செயற்படுவதுபோல் அமைச்சரவையில் செயற்படமுடியாது.
தமது வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சருக்கு இடமளிக்கப்படாவிட்டால், அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியேற வேண்டும். எலும்புகளை சூப்பிக்கொண்டு, அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருக்காமல் இன்றே வெளியேற வேண்டும்.
நான் ராஜபக்சக்களுக்கு அடிபணியவில்லை. துணிவுடன் முடிவெடுத்தேன்.
அதேவேளை உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்க வேண்டும். அவ்வாறு இறங்கிவிட்டு ஆட்சியாளர்களை என்னிடம் ஒப்படையுங்கள். அவர்களை நான் கவனித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
