ரோஹித போகொல்லாகமவுக்கு தூதுவர் பதவி!

சிரேஷ்ட இராஜதந்திரியும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹித போகொல்லாகம, பிரிட்டனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி அவருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்குமாறு அவருக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.

ரோஹித போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles