லாப்ஸ் நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

போதுமான அளவில் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட சுமார் மூன்று வாரங்கள் ஆகும் என லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவித்துள்ளார்.

முன்னர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000 சிலிண்டர்களை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவை எரிவாயு நிரப்புதல் மற்றும் அதன்போது பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எரிவாயு நிரப்புதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நாளாந்தம் 10,000 முதல் 15,000 சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles