லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 200 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், சரியான விலை அதிகரிப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles