லிந்துலை பகுதியில் ஆட்டோ விபத்து: நால்வர் காயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் ஆட்டோவொன்று இன்று (29) அதிகாலை வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவே வேக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த நால்வரும் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வி. தீபன்ராஜ்

Related Articles

Latest Articles