லிப்டிற்குள் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்த சிறுவன்.. கண்டுகொள்ளாமல் நின்ற நாயின் உரிமையாளர்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தனது வளர்ப்பு நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் நின்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

ராஜ் நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டிற்குள் பெண்மணி ஒருவர் வளர்ப்பு நாயுடன் நுழைந்துள்ளார்.

ஏற்கனவே லிப்டிற்குள் இருந்த சிறுவன் வெளியேறுவதற்காக கதவருகே சென்றபோது நாய் அவனது காலை கடித்தது.

வலியால் அந்த சிறுவன் துடிக்க, அந்த பெண்மணியோ அதை துளியும் சட்டைசெய்யாமல் நின்றார்.

இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். அந்த பெண்ணின் மனிதாபிமானமற்ற செயலை இணையத்தில் பலர் கண்டித்துள்ளனர்.

Related Articles

Latest Articles